திலீப்பை தொடர்ந்து சிக்கப்போகும் பெருந்தலைகள்... எம்எல்ஏக்களும், போலீ்ஸ் வலைக்குள்!
நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பிடம் நடத்தும் விசாரணையை அடுத்து மேலும் பலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பின் திட்டம் தெரிந்தும் மௌனமாக இருந்த 2 எம்எல்ஏக்கள் உள்பட மேலும் பலரை போலீசார் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கிறது.
தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17ம் தேதி அங்கமாலி அருகே காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை கடத்தல் கும்பல் வீடியோ பதிவும் செய்தது. இந்த வழக்கை விசாரித்த போலீசார் நடிகர் திலீப் ஆட்களை வைத்து பாவனாவை கடத்தி துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவரை கடந்த 10ம் தேதி கைது செய்தனர்.
நடிகர் திலீப்பை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த விசாரணையின் போது, கடத்தலுக்கு துணையாக இருந்த இரண்டாவது குற்றவாளி யார் என்று போலீசார் துருவித் துருவி கேட்டு வருகின்றனர். கடத்தலில் கூட்டு சதி செய்தவர்கள், விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தவர்கள், ஆதாரத்தை அழிக்க உதவியர்கள், காவல்துறையினரை கடமை செய்யவிடாமல் தடை ஏற்படுத்தியர்வகள் என்று பலரும் சிக்கி உள்ளதாக தெரிகிறது.

எம்எல்ஏக்களுக்கு தொடர்பு
மேலும் நடிகை வழக்கில் 2 எம்எல்ஏக்களும் சிக்க உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குற்றத்தில் அவர்களுக்கு பங்கு இல்லை என்றாலும், திலீப்பின் திட்டம் முன்கூட்டியே தெரிந்தும் மௌனமாக இருந்ததற்காக இவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

அனுமதிக்காக காத்திருப்பு
எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில காவல்துறை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முதல்வர் பினராயி விஜயனின் அனுமதி கேட்டு காத்திருக்கின்றனர் போலீசார்.

வக்கீல் மீது சந்தேகம்
இதே போன்று சுனில்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய வழக்கறிஞர் பிரதீஷ் சக்கோவையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர போலீஸ் குழு முடிவு செய்தள்ளது. இந்த வழக்கில் வக்கீல் சக்கோ ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றுள்ளார். எனினும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறுப்பு
நடிகை பாவனாவை துன்புறுத்திய வீடியோ ஆதாரமுள்ள செல்போனை சுனில்குமார் சக்கோவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 23ம் தேதி சுனில் அந்த செல்போனை சக்கோவின் அலுவலகத்தில் ஒப்படைத்ததாகவும் அவன் கூறியிருந்தார். ஆனால் போலீசார் சக்கோவின் அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications