லாலு ஐயா.. கொஞ்சம் காலை இப்படிக் காட்டுங்க, கழுவி விடுறேன்.. போலீஸ் அதிகாரி கிளப்பிய சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

Police officer washes Lalu' feet, probe ordered
ராஞ்சி: ஜார்க்கண்ட் போயிருந்த ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் கால்களைக் கழுவி விட்ட காவல்துறை அதிகாரியால் சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவிலுக்கு லாலு வந்தபோதுதான் இந்தக் கூத்து நடந்தது. இதுதொடர்பான வீடியோ, படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. மேலும், இன்னொரு போலீஸ்காரர், லாலுவின் செருப்புகளைக் கையில் தூக்கியபடி வந்து மேலும் வெட்கக்கேடாக்கியுள்ளார்.

மாட்டுத் தீவண ஊழலில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குப் போயிருந்த லாலு கடந்த திங்கள்கிழமைதான் ஜாமீனில் விடுதலையாகி வந்தார். வந்தவர் ஜார்க்கண்ட் மாநிலம், தியோரி கோவிலுக்கு சாமி கும்பிடவ ந்தார். அப்போதுதான் இந்தக் கூத்து அரங்கேறியது. செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்கள் சந்திப்பை முடித்து விட்டு நேராக இந்தக் கோவிலுக்கு வந்தார் லாலு. வந்தவரின் காலை ஒரு போலீஸ் அதிகாரி தண்ணீரால் கழுவி விட, இன்னொருவர் செருப்பை பத்திரமாக கையில் தூக்கிக் கொண்டு நடக்க.. அந்த இடமே பரபரப்பாகிப் போனது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. லாலு பிரசாத்தின் கால்களில் ஒரு காவல்துறை அதிகாரி தண்ணீரை ஊற்றிக் கழுவுவது போல புகைப்படம் வெளியாகியுள்ளதால் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த பாத பூஜை விவகாரம், ஜார்க்கண்ட் சட்டசபையிலும் நேற்று பிரச்சினையைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகள் இந்த செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினர். லாலுவுக்கு பாத பூஜை செய்த அதிகாரியின் பெயர் அசோக்குமார் என்று தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+