சசிகலா புஷ்பாவின் டெல்லி, சென்னை வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை/டெல்லி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் டெல்லி, சென்னை வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் திமுகவின் திருச்சி சிவா எம்பியை அதிமுகவின் சசிகலா புஷ்பா எம்.பி. தாக்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, முதல்வர் ஜெயலலிதா தம்மை அறைந்தார் என்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மிரட்டினார் எனவும் பேச நாடே அதிர்ந்தது. இதனால் அதிமுகவில் இருந்து உடனே சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.

இதனிடையே சசிகலா புஷ்பாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியில் உள்ள அவரது கணவர் வீட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக சசிகலா புஷ்பா தரப்பில் போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தால் சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டு முன்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டு முன்பு அம்மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications