ரஷ்மி, ராகுல் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை: லேப்டாப், டாப்லெட் பறிமுதல்
கொச்சி: ஆன்லைன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாடல் ரஷ்மி நாயர், ராகுல் பசுபாலனின் கொச்சி வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், தனது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலனுடன் சேர்ந்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தார். ஃபேஸ்புக்கில் கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் பக்கத்தை துவங்கி அதில் பெண்கள், சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் கொடுத்தனர்.

இந்நிலையில் கொச்சு சுந்தரிகள் பக்கம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது குறித்து விசாரித்தபோது தான் ரஷ்மியும், ராகுலும் சிக்கினர். இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்ட 12 மணிநேரம் கழித்து கொச்சியின் புறநகர் பகுதியான தீர்க்ககாராவில் உள்ள ராகுல் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
வீட்டின் கதவை திறந்தபோது போலீசாருக்கு உள்ளே செல்ல மனம் இல்லாத அளவுக்கு கண்ட்றாவியாக இருந்துள்ளது. வீடு அழுக்காகவும், எங்கு பார்த்தாலும் அழுக்கு துணிகளும், மது பாட்டில்களுமாக கிடந்துள்ளது.
சோதனையின்போது அங்கிருந்த லேப்டாப், டாப்லெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆன்லைன் விபச்சாரத்திற்கும் கிஸ் ஆப் லவ்வுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications