துப்பாக்கியை கழுவும் பெண்ணின் வீடியோ வைரல்.. ஏலோ.. ஏலேலோ.. சம்பவம் செய்த போலீஸ்
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியைத் தேய்த்துக் கழுவும் வீடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சீல் வைத்து, உரிமையாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வியூஸ்களைக் குவிப்பதற்காகவும், லைக்ஸ்களை வாங்கி பிரபலமடைவதற்காகவும் பல்வேறு விநோத வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இதுபோன்ற சில வீடியோக்கள் பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வைரலாவதும், சிலர் சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம்.

அந்த வகையில், பெண் ஒருவர் துருப்பிடித்த துப்பாக்கிகளை பாத்திரம் கழுவுவதுபோல அசால்டாக கழுவும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அந்த வீடியோ பதிவை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியபிரதேசம், மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தரையில் அமர்ந்து கொண்டு மிகச் சாதாரணமாக துப்பாக்கிகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவரின் முகவரியை வைத்து மஹுவா காவல்நிலையத்துக்கு உள்பட்ட கஷேஷ்புரா கிராமத்தில் காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணையில், அப்பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையில் இரவு 8 மணியளவில் சோதனை மேற்கொண்ட போலீஸார் அதன் உரிமையாளர்களான சக்தி கபூர் என்பவரையும், அவரது தந்தையையும் கைது செய்துள்ளனர். வீடியோவில் துப்பாக்கி கழுவிக் கொண்டிருந்த பெண்ணையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த ஏராளமான துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்களும் அங்கு இருந்து தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் மூலம் சட்டவிரோதமாக ஆயுதக் கடத்தல் மற்றும் ஆயுத விற்பனையில் ஈடுபடும் கும்பல் விரைவில் கண்டறியப்படுவார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications