ஆடு, என்கவுண்டர் முதல்வர், நாயின் உறவினர், டீக்கார்.... மாறி மாறி மோடி தலையை உருட்டும் தலைவர்கள்
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை மற்ற கட்சியினர் வெவ்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர்.
அரசியல் மேடைகளில் தங்களது கட்சியின் சிறப்புகளைக் கூறுவதை விட எதிர்க்கட்சியினரின் குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசுவதே பெரும்பாலும் வழக்கத்தில் உள்ளது.
அதிலும் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியை, ஒரு புறம் தொண்டர்கள், ‘நமோ... நமோ..' என புகழ் பாடிக் கொண்டிருக்க மறுபுறம் பலர் 'சுமோ' விளையாட்டு போல கடுமையான வார்த்தைகளால் வசை பாடி வருகின்றனர்.

சுயநலமிக்க ஆடு...
நேற்று பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை சுயநலமிக்க ஆடு போன்றவர் என விமர்சித்துள்ளார் ராஷ்டிரிய லோக்தள சக்தி கட்சித் தலைவர் அஜித் சிங்.

டீ விற்பவர்...
காங்கிரஸ் தலைவர்கள் பலர் மோடியை டீ விற்பவர், டீக்கடைக்காரர் என பலகாலமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவை அழிக்க வந்த சக்தி...
இதே போன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக்மனு சிங்வி கூறுகையில் இந்தியாவை அழிக்க வந்தவர் என்று கூறினார்.

என்கவுண்டர் முதல்வர்...
கடந்த வியாழனன்று மோடி குறித்து குறிப்பிடுகையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 'என்கவுண்டர் முதல்வர்' எனக் குறிப்பிட்டார்.

நாயின் உறவினர்...
அதற்கு சில தினங்களுக்கு முன்னர் மோடியை சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஆசாம் கான் ‘நாயின் உறவினர்' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆண்மையற்றவர்...
அதேபோல், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், மோடியை ‘ஆண்மையற்றவர், மன நலம் இல்லாதவர்' என கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

வரலாறு முக்கியம்....
மற்றொரு சமயத்தில் காங்கிரஸ் கட்சியினர் மோடியை ‘வரலாறு தெரியதாவர்' எனக் குற்றம் சாட்டினர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications