பிரியாணி, மது, பணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பாஜக: ஆம் ஆத்மி புகார்
டெல்லி: வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம், மது பாட்டில், பிரியாணி என கொடுத்து வாக்கு கேட்டனர் திருமங்கலம் இடைத்தேர்தலில். அதுமுதல் ‘திருமங்கலம் பார்முலா' என்றே பிரபலமானது.
இரவோடு இரவாக பாலை கையில் ஊற்றி கற்பூரத்தின் முன்பு சத்தியம் வாங்கி ஓட்டு கேட்ட சம்பவமும் நடந்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலிலும் இதுபோல வாக்காளர்களைக் கவர பாஜக சார்பில் பணம், மதுபானம் மற்றும் பிரியாணி ஆகியவை வழங்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு புகார் கூறியுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு நாளை மறுதினம் ( பிப்.7) தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஒருமாத காலமாக அனல் பறந்த பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுநாள்வரை பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்ற டெல்லியில் இன்னும் இரு தினங்களுக்கு அமைதி நிலவும்.

புகார் வாசிக்கும் கட்சிகள்
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும் ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறுகிறார்கள்.
வாக்காளர்களுக்கு லஞ்சம்
இந்த நிலையில் பா.ஜனதா வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பிரியாணி மது
பாஜக வாக்காளர்களுக்கு பணம், மது, பிரியாணி கொடுப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அசுதோஸ் புகார் கூறியுள்ளார்.
நன்றாக அனுபவிப்பார்கள்
ஏழை வாக்காளர்களின் அடையாள அட்டையையும் அந்தக் கட்சியினர் கைப்பற்றி வைத்து இருக்கிறார்கள். ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க கூடாது என்று வாக்காளர்களை மிரட்டி அச்சுறுத்துவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
பாஜக பதிலடி
இந்நிலையில், ஆம்ஆத்மியின் இந்த புகாருக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது., "பணத்தை வாங்கி கொண்டுதான் ஆம்ஆத்மி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பைக் கொடுத்தது. ஆம்ஆத்மியின் ஒவ்வொரு புகாருக்கும் நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் நரசிம்மா கூறியுள்ளார்.
தகுதியில்லை
ஹவாலா பணம் மோசடி செய்து கட்சியை நடத்துபவர்களுக்கு எங்களை பற்றி சொல்ல எந்தத் தகுதியும் இல்லை' என்று கடுமையாக சாடியிருக்கிறார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications