காய்ச்சலுக்கு மருந்து “நமோ, ராகாபிளேம்” மாத்திரைகள் - தலைவர்கள் பேரில் கலக்கும் மருந்துகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் ஜூரம் மட்டுமல்ல மற்ற ஜூரங்களும் குணமாகும் வகையில் மருந்து நிறுவனங்கள் புதிய மாத்திரைகளை உருவாக்கி உள்ளன.

இந்தியா முழுவதும் கொதிக்கும் தேர்தல் ஜூரம் பார்மஸி துறையையும் விட்டு வைக்கவில்லை.

தேர்தல் ஜூரத்தை பயன்படுத்தி தங்களின் வியாபார யுத்தியை கையாண்டு விற்பனையை அதிகரிப்பதற்காக முடிவு செய்துள்ளன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

Poll fever cure: Ragaflam, Namo tablets fly off pharmacy shelves

வியாபார தந்திரம்:

காய்ச்சல் மற்றும் வலி மாத்திரைகளுக்கு பாஜக வின் நரேந்திர மோடி பெயரையும் காங்கிரசின் ராகுல் பெயரையும் வைத்துள்ளனர். இதனால் பார்மஸிகளில் மாத்திரை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

மாத்திரைல யாரு பெஸ்ட்:

தேர்தல் களத்தில் யார் சிறந்தவர்கள் என்பதில் மட்டுமல்ல, மாத்திரையிலும் இவர்களில் யார் சிறந்தவர்கள் என மக்கள் ஓட்டளித்து வருகின்றனர்.

"நமோ" மாத்திரை:

காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு பயன்படுத்தும் "நிமுசிலைட்" மற்றும் "பாராசிடமால்" மாத்திரைகளின் கலவையாக தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரைக்கு நமோ மாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது.

"ராகாபிளம்" மாத்திரை:

வலிக்கு பயன்படுத்தப்படும் "டைகோஃபினக்" மற்றும் "பாராசிடமால்" ஆகியவற்றின் கலவையான மாத்திரைக்கு ராகாபிளம் என பெயரிடப்பட்டுள்ளது.

விற்பனை ஓகோ:

காய்ச்சல் மற்றும் வலி மாத்திரைகளுக்கு நமோ மற்றும் ராகா என பெயரிடப்பட்ட உடன் மாத்திரை விற்பனை சூடுபிடித்துள்ளதாக பார்மஸி உரிமையாளர்களும் நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் 20 லட்சம் நமோ மற்றும் ராகா மாத்திரைகள் விற்பனையாகி உள்ளதாம்.

நமோ ரேட் கம்மி:

நமோ மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டையின் விலை ரூபாய் 36க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மற்றொரு கட்சி பேர் கொண்ட "அல்கிமின் சுமோ" மாத்திரைகளை விட ரூபாய் 6 விலை குறைவு.

இது "மதிப்பு கூட்டு" மாத்திரை:

தங்கள் தயாரிப்புகளின் மதிப்பையும், விற்பனையையும் அதிகரிப்பதற்காக முதல் முறையாக மருந்துகளுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு பெரிய முக்கிய தலைவர்களின் பெயர்களில் மருந்துகளை விற்பனை செய்து வருவதாக குர்கனைச் சேர்ந்த ஐசிஐ ஹெல்த்கேரின் இயக்குனர் நவீன் ஜெயின் தெரிவித்துள்ளார்.

எல்லா மாநிலங்களிலும் விற்பனை:

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நமோ மத்திரைகளும், ராகாபிளம் மத்திரைகள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

வலிக்கு சிறந்தது "நமோனிஜெல்":

வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்திற்கும் "நமோனிஜெல்" என பெயரிடப்பட்டுள்ளது. நமோ மற்றும் ராகா தவிர திதி, டைஜின், லாலு சிரப் உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+