தேர்தல் செலவு ரூ3500” கோடியாம் –சொல்கிறது தேர்தல் கமிஷன்
டெல்லி: லோக்சபா தேர்தல் செலவு ரூபாய் 3500 கோடியை தொடும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
நடப்பு லோக்சபா தேர்தலில் வாக்காளர்களின் ஜனநாயகக் கடமையை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான விளம்பரங்கள் வெளிவந்திருந்தன.
இதனை அடிப்படையாக கொண்டும், கடந்த 5 ஆண்டுகளில் விண்ணை தொடும் விலைவாசிகளின் அடிப்படையிலும் பார்த்தால் இந்த ஆண்டின் லோக்சபா தேர்தல் செலவு 3 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரத்து 500 கோடி வரை போகலாம் என்கிறது தேர்தல் ஆணையம்.

புதிய ஓட்டுபதிவு இயந்திரங்களை வாங்குவது, பழைய இயந்திரங்களை பராமரிப்பது, காகிதம் மற்றும் அச்சு செலவு, அனைத்து வகையிலான விளம்பரச் செலவினங்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் வாக்குச்சாவடி பணிக்கான படி ஆகிய செலவினங்கள் இந்த வகை செலவினங்களிலேயே வந்துவிடுகிறது. போலீஸ் பாதுகாப்பு தொடர்பான செலவினங்களை அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கிறது.
அடுத்து வரும் லோக்சபா தேர்தல் செலவு இதைப் போல இரட்டிப்பானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதுவரையிலான லோக்சபா தேர்தல் செலவுகள்:
முதல் லோக்சபா தேர்தல் (1952)- ரூ10 கோடியே 45 லட்சம்.
2வது லோக்சபா தேர்தல் (1957) - ரூ 5 கோடியே 90 லட்சம்
3வது லோக்சபா தேர்தல் (1962) - ரூ 7 கோடியே 32 லட்சம்
4வது லோக்சபா தேர்தல் (1967) - ரூ10 கோடியே 79 லட்சத்து 69 ஆயிரம்
5வது லோக்சபா தேர்தல் (1971) - ரூ 11 கோடியே 60 லட்சத்து 87 ஆயிரத்து 450.
6வது லோக்சபா தேர்தல் (1977) - ரூ 23 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரம்
7வது லோக்சபா தேர்தல் (1980) - ரூ 54 கோடியே 77 லட்சத்து 39 ஆயிரம்
8வது லோக்சபா தேர்தல் (1984) - ரூ 81 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரம்.
9வது லோக்சபா தேர்தல் (1989) - ரூ 154 கோடியே 22 லட்சம்.
10வது லோக்சபா தேர்தல் (1991) - ரூ 359 கோடியே 10 லட்சத்து 24 ஆயிரத்து 679.
11வது லோக்சபா தேர்தல் (1996) - ரூ 597 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரம்
12வது லோக்சபா தேர்தல் (1998) - ரூ 666 கோடியே 22 லட்சத்து 16 ஆயிரம்
13வது லோக்சபா தேர்தல் (1999) - ரூ 880 கோடி
14வது லோக்சபா தேர்தல் (2004) - ரூ 1,300 கோடி
15வது லோக்சபா தேர்தல் (2009) - ரூ 1, 400 கோடி
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications