டெல்லியில் பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு !
டெல்லியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
டெல்லி: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் டெல்லியில் சந்தித்து பேசினார்.

டெல்லியில் உள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் அலுவலகத்திற்கு வந்த நடிகர் கமல்ஹாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த தகவலை பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் மரியாதை நிமித்தமாக என்னை புதுடெல்லியில் நடிகர் @ikamalhaasan அவர்கள் சந்தித்தார். pic.twitter.com/NvJSs9cnWV
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) April 10, 2017
தமிழகத்தில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
முன்னதாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் குரல் எழுப்பி வந்தார். அப்போது சென்னையில் வைத்து பொன்.ராதாகிருஷ்ணனை, கமல்ஹாசன் பேசியது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications