பரிகார பூஜைகள் வீணாகின.. சசிகலாவின் தொடரும் சிறை வாழ்க்கை!
சசிகலாவின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் நான்கு ஆண்டுகளுக்கு சிறையில் காலம் தள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தொடர்ந்து 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்தே ஆக அவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் அவரால் அந்த பதவியில் தொடர்ச்சியாக அமர்ந்து அதிகாரம் செய்ய முடியவில்லை. தமிழக முதல்வராக அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவரது கனவும் கனவாகவே போனது.
சிறையில் உள்ள சசிகலா விடுதலை பெற வேண்டும் என்று அவரது பிறந்தநாளில் பல கோவில்களில் பரிகார பூஜைகளை செய்தனர். ஆனால் எந்த பூஜையும் கை கொடுக்கவில்லை.

சசிகலா குடும்பம்
டிடிவி தினகரன் செய்த மகா சண்டி யாகமும் கை கொடுக்கவில்லை. ஓ.பன்னிர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக இணைந்து விட்டதால், சசிகலா குடும்பத்தினர் தற்போது கடைசி முயற்சியாக முதல்வரை மாற்ற வேண்டும் என்று மல்லுக்கட்டி வருகின்றனர்.

சசிகலா ஜாதகம்
சசிகலாவிற்கு ரேவதி நட்சத்திரம் மீன ராசி. லக்னம் சிம்மம், சிம்மத்தில் சூரியன். இரண்டாமிடமான கன்னியில் சுக்கிரன் நீசம் பெற்று அமர்ந்துள்ளார். லக்னத்திற்கு 12ஆம் இடமான கடகத்தில் இரண்டாம் அதிபதியான புதன் அமர்ந்துள்ளார். துலாமில் சனி உச்சம் பெற்றுள்ளார். தனுசில் ராகு, செவ்வாய், மீனத்தில் சந்திரன். மிதுனத்தில் குருவும் கேதுவும் அமர்ந்துள்ளனர்.

சிறை வாழ்க்கை
சசிகலாவிற்கு ஆட்சி அதிகாரம் செய்ய ராசியில்லை. பின்னால் இருந்து இயக்க மட்டுமே அமைப்பு உள்ளது. குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் பெற்றுள்ளதும் அவரது குடும்ப வாழ்க்கையில் சுகமில்லை.

புதன் மறைவு
இரண்டாம் அதிபதியும், 11ஆம் அதிபதியுமான புதன் 12ஆம் இடத்தில் நீசம் பெற்று அமர்ந்துள்ளார். இதனால் அவரின் பேச்சுத்திறமையும் எடுபடவில்லை. அவரால் சிறையில் இருந்து தற்சமயத்திற்கு வெளியே வர முடியாமல் போனதற்கு காரணம், ராகு கேது பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும் சசிகலாவிற்கு சாதகமில்லை என்றே கூறுகின்றனர்.

கைவிட்ட பரிகாரங்கள்
சசிகலா சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று பல பரிகாரங்களை செய்துள்ளனர். ஆனால் எந்த பரிகாரமும் கை கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்குசிறை வாழ்க்கைதான் அதில் மாற்றமேதும் இல்லை என்கின்றனர் ஜோதிடர்கள்.


Click it and Unblock the Notifications
