கோஹ்லியை மனதார காதலிக்கிறேன்: பூனம் பாண்டே- ஏது இது அனுஷ்காவுக்கு தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை மனதார காதலிப்பதாக பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே பெயரை கேட்டாலே அனைவருக்கும் சர்ச்சைகள் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுவார் பூனம். இதை அவரே பெருமையாக கருதுகிறார்.
அப்படிப்பட்டவர் அண்மை காலமாக அமைதியாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சர்ச்சையை கிளப்ப புதிய ஐடியாக்கள் கிடைக்கவில்லை. ஆனால் விரைவில் ஐடியா கிடைத்து சர்ச்சையை கிளப்புவேன். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை யார் தான் காதலிக்க மாட்டார்கள். நான் அவரை மனதார காதலிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications