டெல்லியில் கிடைத்த ”முட்டை” – தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் பகுஜன் சமாஜ்!
டெல்லி: டெல்லி தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவிய மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இதேபோல் அண்மையில் நடந்த மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி 1.4 சதவீத ஓட்டுகளையே பெற்று இருக்கிறது.

தேசிய கட்சி அந்தஸ்தை ஒரு மாநில கட்சி பெறவேண்டும் என்றால் அந்த கட்சி 4 அல்லது அதற்கும் கூடுதலான மாநிலங்களில் போட்டியிட்டு 6 சதவீத ஓட்டுகளையோ, அல்லது 2 தொகுதிகளையோ கைப்பற்றி இருக்கவேண்டும். ஆனால், இந்த சதவீத ஓட்டுகளையோ, குறிப்பிட்ட இடங்களையோ பகுஜன் சமாஜ் கட்சி பெறவில்லை.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே இந்த பிரச்சினை நிலுவையில் உள்ளது. எனவே இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு நோட்டீஸ்அனுப்பப்படும். மேலும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் முழுமை பெற்றுவிடும்" என்று தெரிவித்தனர்.
இதனால் பகுஜன் சமாஜ், தேசிய கட்சி என்னும் அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications