5 பந்துக்கு 5 சிக்சர்.. ரிங்கு சிங்குக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன ஆபாச நடிகை.. போட்டோ வேற!ஆஹா
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று ஒரேநாள் இரவில் ரிங்கு சிங் ஹீரோவானார். இவருக்கு ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்காவின் பிரபல ஆபாச நடிகை கேந்திரா லஸ்ட் போட்டோ ஒன்றை பகிர்ந்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளது பேசும்பொருளாகி உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் என்பது பல அணிகள் 200 ரன்களை குவிப்பது தான். நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்து கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
அதாவது முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. அதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 207 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதில் முக்கியமான விஷயம் என்றால் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டது. குஜராத் அணியில் யாஷ் தயால் பந்து வீசினார்.
முதல் பந்தைய சந்தித்த கேகேஆர் வீரர் உமேஷ் யாதவ் சிங்கிள் எடுத்தார். இதையடுத்து ரிங்கு சிங் தான் சந்தித்த அடுத்த 5 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டி கேகேஆர் அணியை வெற்றி பெற வைத்தார். கேகேஆர் அணி தோற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஒற்றை ஆளாக ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சரை விளாசினார்.
தனது அதிரடி ஆட்டம் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற ரிங்கு சிங் ஒரே நாள் இரவில் ஹீரோவாவானார். அவர் 21 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். மேலும் ரிங்கு சிங்குவின் பெயர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட்டானது. ரிங்கு சிங்குவின் இந்த ஆட்டத்தை அனைவரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் ரிங்கு சிங்குவின் அதிரடி ஆட்டத்தால் அமெரிக்காவின் ஆபாச நடிகை கேந்திரா லஸ்ட் கவரப்பட்டுள்ளார். இதனால் அவர் ரிங்கு சிங்குவிற்கு ஆதரவாகவும், அவரை பாராட்டியும் கேந்திரா லஸ்ட் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்து தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.

அதாவது கேந்திரா லஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிங்கு சிங்குவுடன் தான் இருப்பது போன்ற போட்டோவை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். மேலும் ‛‛Ringu is King'' என அவர் பாராட்டி உள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்னும் சிலர் வேடிக்கையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தாலும், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்தார். அப்போது ரிங்கு சிங்கும் தனது தந்தைக்கு உதவியாக இருந்தார். இந்த பணிக்கு நடுவே கிடைக்கும் இடைவெளியில் கிரிக்கெட் விளையாடி அவர் முதல்தர போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தற்போது அவர் கேகேஆர் அணிக்கு விளையாடி வருகிறார். இதற்கு முன்பு இவர் பஞ்சாப் அணிக்கு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications