சட்டசபையில் ஆபாச படம் பார்த்த மாஜிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு... கர்நாடக தேர்தலில் பாஜகவின் கூத்து!
கர்நாடக சட்டசசபை கூட்டத்தின் போது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக மாஜி அமைச்சர்கள் லக்ஷ்மன் சாவடி, பட்டீல் இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : கர்நாடக சட்டசபை கூட்டத்தின் போது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக மாஜி அமைச்சர்கள் லக்ஷ்மன் சாவடி, பட்டீல் இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது அமைச்சர் லக்ஷ்மன் சாவடி தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்த வீடியோ வெளியானது. லக்ஷ்மன் சாவடியுடன் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த சுற்றுச்சூழல் மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் கிருஷ்ணா பாலமேர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பட்டீலும் ஆபாச வீடியோ பார்த்தாக குற்றம்சாட்டப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் 3 பேரும் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தனர். இந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 2 மாஜிக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக அளித்துள்ளது.
லக்ஷ்மன் சாவடி அதானி தொகுதியில் இருந்தும், படீல் நார்கண்ட் தொகுதியிலும் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு மாஜி அமைச்சரான கிருஷ்ணா பாலமேருக்கும் படாமி, வருணா, சக்லேஷ்புர், சித்லகட்டா உள்ளிட்ட 4 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை பாஜக ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.
ஜம்முகாஷ்மீர், உன்னாவ், சூரத் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரங்களில் பாஜகவினர் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருப்பது பெரும் அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தின் போது ஜாலியாக செல்போனில் கசமுசா வீடியோ பார்த்தவர்களை மீண்டும் வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை விளங்க முடியாத மர்மமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications