1.5 லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் ரூ.6 ஆயிரம் கோடி பொருளாதார மண்டலம்: அடிக்கல் நாட்டினார் மோடி
மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்.
நவிமும்பை நாவா ஷேவாவில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுக பொறுப்பு கழகத்தில் நிறுவப்பட இருக்கும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் 277 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இதே ஜவகர்லால் நேரு துறைமுக பொறுப்பு கழகத்தில் ரூ.1,926 கோடி மதிப்பீட்டில் தயாராகும் துறைமுக இணைப்பு நெடுஞ்சாலை திட்டத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: உலகில் மூன்றில் இரு பங்கு வர்த்தகமும், 50 சதவீத சரக்கு போக்குவரத்தும் இந்திய பெருங்கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. எனவே துறை முகங்கள்தான் நமது நாட்டின் வளத்துக்கான நுழைவாயில்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மூலமாக பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதனால் மகாராஷ்டிரா மக்கள் வேலை தேடி பிற பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்படும். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு காரணமாக சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களை கண்டறிந்து அதை சரி செய்ய கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்றுமதிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். ஏற்றுமதியை தடை செய்யும் காரணங்கள் என்ன என்பது குறித்து அனைத்து மாநிலங்களிடமும் கருத்து கேட்டுள்ளோம். மாநிலங்கள் தாங்களே ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்களை அமைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளோம். ஏற்றுமதியில் புதிய உச்சத்தை தொட மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது அவசியமாகும்.
கப்பல் வணிகத்துக்கான லைசென்ஸ் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட தேவையில்லை. ஒரே முறை லைசென்ஸ் பெற்றால் போதும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்மூலமாக கடல்சார் துறை மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு மோடி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர், முதல்வர், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி












Click it and Unblock the Notifications