ஹாங்காங்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது?
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் அந்த நாடும் ராணுவமும் தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் http://www.lankann.com/ என்ற இணையதளம் இன்று ஹாங்காங்கில் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் http://www.lankann.com/ என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
இதுவரை இச்செய்தி பற்றிய உண்மைத்தன்மையும் உறுதிசெய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications