என் உடல் விற்பனைக்கு: வறுமையால் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்த முன்னாள் மாடல் அழகி
காந்திநகர்: குஜராத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள பணம் இல்லாமல் வறுமையில் அல்லாடும் பெண் ஒருவர் தனது உடல் விற்பனைக்கு என்று ஃபேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர். அவரது தாய் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். தந்தை அண்மையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்து படுத்தபடுக்கையாக உள்ளார். வறுமையில் வாடும் சாந்தினியால் பெற்றோரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர் தனது உடல் விற்பனைக்கு என்று ஃபேஸ்புக்கில் துணிச்சலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சாந்தினி கூறுகையில்,
என் பெற்றோரை காப்பாற்ற பணம் இல்லை. உதவி கேட்கவும் ஆள் இல்லை. பிறகு நான் என்ன செய்ய முடியும். இந்த அறிவிப்பை பார்த்து பலர் என்னை தொடர்பு கொண்டார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர உதவ யாரும் முன் வரவில்லை என்றார்.
சாந்தினி பற்றி குஜராத் மாநில பெண்கள் ஆணைய தலைவர் லீலாபென் அன்கோலியா கூறுகையில்,
குஜராத்தில் உள்ள பொது மருத்துவமனைகளில் அவரது பெற்றோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. சாந்தினிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர் எங்களை அணுகலாம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications