தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் மின்சார பற்றாக்குறை குறைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், நாட்டின் மின்சார பற்றாக்குறை 3.9 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மின்சாரத் தேவை குறைந்ததால், பற்றாக்குறை குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 5.1 சதவிகிதமாக இருந்த மின்பற்றாக்குறை, மழை காரணமாக 3.9 சதவீதமாக குறைந்துள்ளது. மழையால் ஏற்பட்ட இதமான தட்பவெப்ப நிலை காரணமாக குளிர்ச்சாதன கருவிகளின் வசதிகளின் பயன்பாடு குறைந்துள்ளது மற்றும் விவசாய மோட்டார் பம்புசெட்டுகள் பயன்பாடு குறைந்துள்ளது போன்றவை மின்பற்றாக்குறை குறைய காரணம் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications