ரயில்வே பட்ஜெட்: மோடியின் ஆசையை நிறைவேற்றிய சுரேஷ் பிரபு
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டில் பிரதமர் மோடியின் ஆசையை தான் நிறைவேற்றி வைத்துள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து தான் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை குறைந்துள்ளதால் பயணிகள் ரயில் கட்டணம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டீசல் விலை குறைந்துள்ளதால் வரும் நிதியாண்டில் ரூ.12000 கோடி முதல் ரூ.15000 கோடி வரை சேமிக்கலாம் என்று பிரபு தெரிவித்திருந்தார். அந்த பணத்தை ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் புதிய திட்டங்களை அறிவிப்பதை விட உள்கட்டமைப்பை மேம்படுத்தவே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் வகையில் தான் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications