கர்ப்பத்தைக் கலைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பிரதியுஷா... டாக்டர்கள் தகவல்
மும்பை: சின்னத்திரை நடிகை பிரதியுஷா தற்கொலைக்கு முன்னர் கருக்கலைப்பு செய்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த பிரபல இந்தி சின்னத்திரை நடிகை பிரதியுஷா (24). இவர் நடித்த இந்தி சீரியல் ஒன்று தமிழில் மண்வாசனை என்ற பெயரில் ஒளிபரப்பாவதால், தமிழ் ரசிகர்களுக்கும் இவர் அறிமுகமானவரே.
இந்நிலையில், இம்மாதம் முதல் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் பிரதியுஷா. காதலருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

காதலரிடம் விசாரணை...
இது தொடர்பாக அவரது காதலரான தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் மீது பிரதியுஷாவின் தாயார் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

சந்தேகம்...
இதற்கிடையே பிரதியுஷாவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் தற்கொலை செய்து கொண்டபோது கர்ப்பமாக இருந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தனர். தற்போது ஆய்வுகளின் மூலம் அந்த சந்தேகம் உண்மையாகியுள்ளது.

கர்ப்பம் உறுதி...
அதாவது கர்ப்பமாக இருந்த பிரதியுஷா, தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கருக்கலைப்பு செய்திருக்க வேண்டும் என்பது அவர்களது வாதம். இது பிரதியுஷா கருப்பபையில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களை பரிசோதனை செய்ததன் மூலம் தெரிய வந்துள்ளதாக ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை...
ஆனால், எவ்வளவு நாட்கள் அவர் கர்ப்பமாக இருந்தார் என்றும், ஏன் கருக்கலைப்பு செய்தார் என்பது குறித்தும் காரணம் தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வழக்கில் திருப்பம்...
பிரதியுஷா கர்ப்பமாக இருந்ததும், பின்னர் அதனை அவர் கருக்கலைப்பு செய்து கொண்டதும் உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications