ஹரியானாவில் அதிர்ச்சி.. சினை ஆட்டை பலாத்காரம் செய்து கொன்ற 8 மனித மிருகங்கள்!
ஹரியானாவில் ஒரு சினை ஆட்டை 8 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததால் உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மேவாட்: ஹரியானாவில் சினை ஆடு ஒன்றை 8 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததால் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிக அளவில் நடைபெற்றுவருவதை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காம வெறியர்களின் பலாத்கார செயல்கள் விலங்குகள் மீதும் திரும்பியிருக்கிறது என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், மேவாட் பகுதியில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி இரவு சினை ஆடு ஒன்றை 8 ஆண்கள் மது குடித்த வெறியில் கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேவாட் பகுதியைச் சேர்ந்த, அஸ்லு என்பவர் பலாத்காரம் செய்யப்பட்ட ஆட்டின் உரிமையாளர். இவர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி மேவாட்டில் உள்ள நகினா காவல் நிலையத்தில் தனது ஆட்டை பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த சாவகர், ஹரூன் ஜாஃபர் உள்ளிட்ட 8 பேர் மீது புகார் அளித்துள்ளார்.
ஆட்டின் உரிமையாளர் அஸ்லு அளித்த புகாரின் பேரில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆட்டை பலாத்காரம் செய்தவர்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நாகினா காவல் நிலைய போலீஸ் ராஜ்பிர் சிங் கூறுகையில், புகாரின் அடிப்படையில் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் 5 பேர் அடையாளம் காணப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சில மனித மிருகங்கள் இப்போது வாயில்லா ஜீவன்களையும் தனது பாலியல் வெறிக்கு இரையாக்க இறங்கியுள்ளனர். காவல் துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications