உங்க அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வராது.. கர்ப்பிணியை தள்ளு வண்டியில் கொண்டு சென்ற கணவர்!போபாலில் கொடுமை

Subscribe to Oneindia Tamil

போபால்: பிரசவ வலியால் துடித்த மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எந்த ஆம்புலன்ஸும் வராததால், சுட்டெரிக்கும் வெயிலில் தள்ளு வண்டியில் அவரை படுக்க வைத்து கணவரே தள்ளிச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் தாமோ மாவட்டத்தில் உள்ள ரானே கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வால் (32). கூலித் தொழிலாளி. இவருக்கு ஸ்வேதா (25) என்ற மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதனிடையே, ஸ்வேதா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸை கைலாஷ் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பல முறை முயற்சி செய்தும் யாரும் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு முறை அழைப்பை ஏற்ற போதிலும், "உங்க அவசரத்துக்காக உடனே எல்லாம் வர முடியாது" என எதிர்முனையில் பதில் அளித்துள்ளனர்.

Pregnant Wife Was Taken To Hospital On Push-Cart By His Husband In Madhya Pradesh

இதனால் என்ன செய்வதென தெரியாமல் இருந்த கைலாஷ், வேறு வழியில்லாமல் தனது மனைவியை அருகில் இருந்த தள்ளு வண்டியில் படுக்க வைத்து சுட்டெரிக்கும் வெயிலில் அவரை 2 கி.மீ. தூரம் தள்ளிச் சென்று ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. இதையடுத்து, அங்கிருந்த ஆம்புலன்ஸில் மனைவியை அவர் ஹட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். தற்போது அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது கர்ப்பிணி மனைவியை கணவர் கை வண்டியில் இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், அலட்சியமாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டா மருத்துவ அதிகாரி ஆர்.பி. கோரி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+