அனுஷ்கா சர்மாவின் ஸ்விங் சாங்கை விடுங்க... நம்ம சங்கீதா சர்மாவை பாருங்க.. ரியலை விட வைரலாகும் ரீல்!
லூதியானா: பிரசவ அறையில் பொதுவாக அய்யோ அம்மா என்ற சப்தம்தான் அனைவருக்கும் கேட்கும். இது சிசேரியன் டெலிவரிக்கும் பொருந்தும். ஆனால் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பாடெல்லாம் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
லூதியானாவை சேர்ந்த சங்கீத சர்மாவுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் 2-ஆவது முறையாக கர்ப்பம் தரித்தார். இதைத் தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் குழந்தை அவருக்கு சிசேரியன் என்பதால் இரண்டாவது குழந்தையையும் சிசேரியன் முறையில் வெளியே எடுக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தில் தடாக்னே தோ என்ற படத்தில் கேர்ல்ஸ் லைக் டூ ஸ்விங் என்ற பாடலுக்கு பிரியங்கா சோப்ராவும் அனுஷ்கா சர்மாவும் சுழன்று சுழன்று ஆடும் பாடலுக்கு சங்கீதா சர்மா நடனம் ஆடினார்.

மருத்துவர்
அப்போது மருத்துவர் வந்ததும் தனது நடன அசைவுகளின் வேகத்தை குறைத்த சங்கீதாவுக்கு ஒரே ஷாக். ஏனெனில் மருத்துவரும் சேர்ந்து அந்த நடனத்தை ஆடினார். அனுஷ்கா சர்மா ஆடிய வீடியோவை விட சங்கீதா சர்மாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

வெளியிட்டது
இந்த வீடியோவை வெளியிட்டவருக்கு சங்கீதா சர்மா நன்றி கூறியுள்ளார். அப்போது அவர் இந்த வீடியோவை வெளியிட்டமைக்கு நன்றி. இந்த வீடியோவை பார்க்கும் மக்களுக்கு என் மருத்துவரின் உள்நோக்கத்தின் மீது சந்தேகம் எழுப்புவர்களுக்கு நான் ஒன்றை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
|
வழிகாட்டுதல்
இது எனக்கு இரண்டாவது பிரசவம். முதல் பிரசவமும் எனக்கு சிசேரியன் என்பதால் இரண்டாவது பிரசவமும் அதே முறையில் நடத்தப்பட்டது. நடனம் ஆடுவது என்பது கர்ப்பிணிகளுக்கு புத்துணர்ச்சியை தரும். ஆனால் அதை முறைப்படி வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகளும்
குருட்டுத்தனமாக எதையும் பின்பற்ற வேண்டாம். நான் ஒரு நடன இயக்குநர் என்பதால் எனக்கு நடனம் ஆடுவது இயல்பாகவும் எளிதாகவும் இருந்தது. எனவே இதை எந்த கர்ப்பிணிகளும் முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சங்கீதா.

பெண்ணுக்கு ஏற்படும்
பிரசவம் என்பது சிசேரியனாக இருந்தாலும் அது ஒரு வகையிலான வலியை ஏற்படுத்தும். ஆனால் அந்த வலியை அனுபவிப்பதற்கு முன்னர் நம் மனநிலையை சீராக்கிக் கொள்ள வேண்டும். அது இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் என்பது உண்மை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications