ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமல்
ஜிஎஸ்டி தொடர்பான, நான்கு துணை மசோதாக்களுக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் நாடு முழுக்க அமலுக்கு வருகிறது.
டெல்லி: கடந்த 2005ம் ஆண்டு ஜிஎஸ்டி மசோதா காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு அரசால் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த மசோதாவை சில காரணங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் மோடி தலைமையிலான பாஜ அரசு 2015, மே மாதம் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது.
போதிய பலம் இல்லாத காரணத்தால், மாநிலங்களவையில் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை சில திருத்தங்களுக்கு பிறகு, எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் ஜிஎஸ்டி மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இதன்பிறகு, நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்ட சபைகளில் இந்த மசோதாவை நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதன் பின் இந்த மசோதா சட்ட அந்தஸ்தைப் பெற்றது.
இதற்கு அடுத்தபடியாக ஜிஎஸ்டி கவுன்சில் ஒன்றை உருவாக்கப்பட்டது. இந்த கவுன்சிலில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டது.இப்போது இறுதி வடிவமாக ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக, 4 ஜிஎஸ்டி துணை மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நான்கு துணை மசோதாக்களுக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.
எனவே ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் நாடு முழுக்க அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications