வாஜ்பாய் வீட்டுக்கு சென்று "பாரத ரத்னா" விருது கொடுத்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!!
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அவரது வீட்டுக்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபையை உருவாக்கிய மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 1998-2004ஆம் ஆண்டு காலத்தில் நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஒதுங்கி உள்ளார்.

மதன் மோகன் மாளவியா காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தவர். நாடு விடுதலைக்கான போராட்டத்தின் போது இந்து மகாசபையை உருவாக்கியவர். இந்த அமைப்புதான் இந்துத்துவா கொள்கைகளை விதைத்த முன்னோடி அமைப்பாகும்.
வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில்தான் பாரத ரத்னா விருது வழங்கப்படும். ஆனால் இம்முறையோ மரபுகளை மீறி டெல்லியில் உள்ள வாஜ்பாய் வீட்டுக்கே நேரில் சென்று பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications