மாளவியாவுக்கு பாரத ரத்னா- அத்வானி, பாதலுக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப்!
டெல்லி: இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடியான மதன் மோகன் மாளவியாவுக்கான பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவரது குடும்பத்தினரிடம் இன்று வழங்கினார். பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. எல்.கே. அத்வானி, பிரகாஷ்சிங் பாதல், ஜகத்குரு ஸ்வாமி ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் அத்வானி, பிரகாஷ் சிங் பாதல், ஜகத்குரு ஸ்வாமி ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு ஜனாதிபதி பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார்.
தமிழக முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, பில்கேட்ஸ், சுதா ரகுநாதன் உள்ளிட்ட 12 பேருக்கு பத்ம பூஷண் விருதும், சஞ்சய் லீலா பன்சாலி உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதையும் அவர் வழங்கினார்.

பாரத ரத்னா
சுதந்திர போராட்ட வீரரும் இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடியான மதன்மோகன் மாளவியாவுக்கான பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் பத்ம விபூஷண் விருதைப் பெறவில்லை. இன்று பத்ம விருது பெறாதவர்களுக்கு மற்றொரு நாளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications