அதிர்ச்சியில் காங்கிரஸ்! ஜனாதிபதி தேர்தல் சொன்ன செய்தி.. ஜார்க்கண்டில் ஆபரேசன் தாமரை?
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 எம்.எல்.ஏக்களில் 70 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
81 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்டில் இந்த கூட்டணி 51 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கூட்டணி பலம்
இதன் மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவரது கட்சி அந்த தேர்தலில் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிபிஎம்எல் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் போட்டியிட்டனர். 21 ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். வரும் 25 ஆம் தேதி இவர் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக பதவியேற்க இருக்கிறார்.

பாஜகவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில்தான் மாநில வாரியாக விழுந்த வாக்குகள் விபரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் அங்கு மொத்தமாகவே 9 வாக்குகள் மட்டுமே யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக விழுந்திருக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா திரௌபதி முர்முவுக்கு ஆதரவளித்திருந்தாலும் அக்கட்சி மற்றும் பாஜக வாக்குகளை சேர்த்தால் 55 முதல் 60 வாக்குகளே விழுந்திருக்கும். ஆனால், 81 எம்.எல்.ஏக்களை கொண்ட ஜார்க்கண்டில் 70 வாக்குகள் திரௌபதி முர்முவுக்கு விழுந்துள்ளது.

ஆபரேசன் தாமரை
இதன் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கட்சி உத்தரவை மீறி பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது தெரிகிறது. ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க 42 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில் 25 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகவுக்கு காங்கிரஸ், ஜே.எம்.எம். மற்றும் சிறிய கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் போதுமானது என்பதால் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா வரிசையில் ஜார்க்கண்டிலும் ஆபரேசன் தாமரை தொடங்கப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications