ஜனாதிபதியின் மகளுக்கு பேஸ்புக்கில் 'ஆபாச மெசேஜ்' அனுப்பிய மர்மநபர் !
டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளுக்கு பேஸ்புக்கில் ஆபாச தகவல் அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜிக்கு மர்ம நபர் ஒருவர் பேஸ்புக்கில் ஆபாச தகவல்களை அனுப்பி உள்ளார். அந்த தகவல் பெங்காலி மொழியில் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த சர்மிஸ்தா முகர்ஜி, ஆபாச தகவல்களை அனுப்பிய அந்த மர்ம நபரை முதலில் பிளாக் செய்தார். பின் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அத்துடன், ஆபாச தகவல்களை அனுப்பிய மர்ம நபரின் பேஸ்புக்கை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். மேலும் இதனை பலரும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். குற்றவாளியை பிடிக்க உதவுமாறு சமூக வலைதளவாசிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசு தலைவரின் மகளுக்கே ஒருவர் ஆபாச தகவல் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆபாச தகவல் அனுப்பிய நபர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications