துர்க்கா பூஜை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ள ஜனாதிபதி: அதிமுக எம்பிக்களை சந்திப்பாரா?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தசரா பண்டிகை துர்க்கா பூஜையாக விமரிசையாக கொண்டாடப்படும். மேற்கு வங்கத்தை சேர்ந்தவரான குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி துர்க்கா பூஜையை கொண்டாடுவதற்காக டெல்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள தனது சொந்த ஊரான மிராட்டி கிராமத்திலுள்ள வீட்டில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டு உறவினர்களுடன் உரையாடி மகிழ்கிறார் பிரணாப் முகர்ஜி.

அதிமுக திட்டம்
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி, ஜனாதிபதியை சந்தித்து அதிமுக எம்.பிக்கள் நாளை மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

மருமகள் பணிவிடை
ஹாயாக உட்கார்ந்து கொண்டு பணிவிடை செய்ய வந்த மருமகளுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் பிரணாப்.

அக்காவுடன் அமர்ந்துள்ள பிரணாப்
வீட்டுக்கு வந்த அக்கா அன்னபூர்ணாவுடனும், அண்ணன் பிஜுஸ் மொகாபத்யாயாவுடனும் பேசிக் கொண்டிருக்கிறார் பிரணாப்.

மகனுடன் முகர்ஜி
மகன் அபிஜித் முகர்ஜியுடன் அளவளாவும் பிரணாப் முகர்ஜி.


Click it and Unblock the Notifications
