விநாயகசதுர்த்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி : விநாயகசதுர்த்தி விழாவையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விநாயகசதுர்த்தி விழா கொண்டாடும் இந்த சந்தோஷமான நேரத்தில் நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

விநாயகர் பிறந்தநாளை குறிக்கும் விநாயகர்சதுர்த்தி விழாவில் மக்கள் ஞானம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெற்று வெற்றி பெறவேண்டும். கணேசபெருமானின் அருளால் மக்கள் தடைகளை கடந்து அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். நாடு முழுவதும் அன்பும், அமைதியும், சமாதானமும் நீடிக்க வேண்டும்.
இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications