குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகரா்ஜி இன்று மரணமடைந்தார்.
சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் சுவ்ரா முகர்ஜி. இந்த நிலையில் இன்று காலை 10.51 மணியளவில் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவருக்கு சில காலமாகவே மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 7ம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
It is informed with deep sorrow that First Lady, Mrs Suvra Mukherjee passed away this morning at 1051 am
— President of India (@RashtrapatiBhvn) August 18, 2015 வங்கதேசத்தில் உள்ள நர்ஹெய்ல் மாவட்டம்தான் சுவ்ரா முகர்ஜி பிறந்த ஊராகும். இதே ஊரில் பிறந்தவர்தான் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications