வாஜ்பாய் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வாஜ்பாயின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

    டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். பாஜகவின் முக்கிய தலைவரான இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

    President Ram Nath Kovind condolences for Vajpayee death

    இவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. ஒரு கிட்னி செயலிழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஒரு கிட்னி மட்டுமே இவருக்கு இயங்கியது.அவருக்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்தது.அவரது இறுதி ஊர்வலம் நாளை நடக்கும் என்று கூறப்படுகிறது.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    வாஜ்பாய் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ''முன்னாள் பிரதமரும் சிறந்த இந்திய அரசியல் தலைவருமான வாஜ்பாய் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரது தலைமைப்பண்பு, முற்போக்கு சிந்தனை அவரை சிறந்தவராக்கியது.'' என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+