பற்றி எரிகிறது காஷ்மீர்... தலையிடுங்கள் ஜனாதிபதி... உமர் அப்துல்லா வேண்டுகோள்!
டெல்லி: "கடந்த 42 நாட்களாக காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காஷ்மீரில் நடப்பது அரசியல் பிரச்சனை என்பதை மத்திய அரசு உணரவில்லை. எனவே நீங்கள் தலையிட்டு சுமூகத் தீர்வை எட்ட வேண்டும்" என்று காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தலைமையில் 20 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
புர்கன் வானி கொலைக்குப் பின்னர் காஷ்மீரே களேபரமானது. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரடியாக தலையிட்டு சுமூகமான முடிவை கொண்டு வர வேண்டும் என்று ஒமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்திய பின்னர், ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்சனையை அங்கீகரிப்பதில் மத்திய அரசு தோல்வி கண்டதால்தான் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இது அரசியல் பிரச்சனை என்பதை மத்திய அரசு உணரவில்லை. காஷ்மீர் பிரச்சனை என்ன என்று அனைவரையும் அழைத்து அர்த்தமுள்ள சுமூகமான பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும்.
காஷ்மீரில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீ, தற்போது பஞ்சால், செனாப் பள்ளத்தாக்கிற்கும், கார்கிலுக்கும் பரவியுள்ளது. நிலைமை மோசமாக போய்க் கொண்டிருப்பதை மத்திய அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை.
காஷ்மீரில் பெட்ரோல் விற்பனைக்கு தடை விதிப்பது, அத்தியாவசிய பொருட்களை முடக்குவது போன்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகளின் மூலம் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாது. காஷ்மீர் மாநில மக்களோடு மத்திய அரசு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்றார் ஒமர் அப்துல்லா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications