டெல்லியில் கோயில் தோட்டத்தில் விளையாடிய 8 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது பூசாரி கைது
டெல்லி: டெல்லியில் கோயில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 60 வயது பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜென்மாஷ்டமி திருநாளையொட்டி நேற்று நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
அதன்படி, தெற்கு டெல்லியில் உள்ள சத்பிரி பகுதியில் அமைந்துள்ள கோயிலொன்றிலும் நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பூஜைக்கு வந்திருந்த சிறுமிகள் சிலர் இரவில் கோவில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பூசாரி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி தனியறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பூசாரி மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக, குற்றம் சாட்டப்பட்ட 60 வயது பூசாரியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இளஞ்சிறாருக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications