"பவன் கொஞ்சம் பேச்சை நிறுத்துங்க.." டவரில் ஏறிய இளைஞர்கள்.. டக்கென மைக்கை பிடித்து இறங்க சொன்ன மோடி
அமராவதி: ஆந்திராவில் என்டிஏ கூட்டணி சார்பில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் செயல் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. இதற்காகப் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் இன்று பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு , பவன் கல்யாண் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிரஜாகலம் அதாவது மக்களின் குரல் என்ற தலைப்பில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி: அப்போது சிலர் அங்கே இருந்த விளக்கு கோபுரத்தின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விளக்கு கோபுரத்தின் அவர்கள் ஏறிய போது பிரதமர் மோடி அவர்களைக் கண்டித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதாவது அந்த பொதுக்கூட்டத்தில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் விளக்கு கோபுரத்தின் மீது ஏறியுள்ளனர். இதைக் கவனித்த பிரதமர் மோடி உடனடியாக பவன் கல்யாண் பேசிக் கொண்டு இருக்கும் போதே குறுக்கிட்டார். அங்கே மின்சாரக் கம்பிகள் செல்வதால் உடனடியாக அங்கிருந்து இறங்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.
பதறிய பிரதமர்: பலன் கல்யாண் பேச்சைக் குறுக்கிட்ட பிரதமர் மோடி, "அங்கே மின்சாரக் கம்பிகள் உள்ளன, நீங்கள் அங்கு என்ன செய்கிறீர்கள்? உங்கள் உயிர் விலைமதிப்பற்றது, தயவுசெய்து கீழே இறங்குங்கள்.. செய்தியாளர்கள் உங்களைப் போட்டோ எடுக்கிறார்கள். உடனே நீங்கள் கீழே வாருங்கள்.. கூட்டத்தில் இருக்கும் காவலர்கள் பொதுமக்களை தயவுசெய்து ஒழுங்குபடுத்துங்கள், ஏதாவது தவறு நடந்திருந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கும். தயவு செய்து கீழே இறங்குங்கள்" என்றார்.
அப்போது மேடையில் இருந்த சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரும் அவர்களைக் கீழே இறங்கச் சொன்னார்கள். பிரதமர் மோடி கூறிய பிறகே அந்த இளைஞர்கள் மின்சார கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். அதன் பிறகே பிரதமர் மோடி தனது இருக்கையில் அமர்ந்தார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் தனது உரையை நிறைவு செய்தார்.
ஆந்திர அரசியல்: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் உடன் கூட்டணி உறுதியான பிறகு பிரதமர் மோடி அங்கே பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். கடந்த 10 ஆண்டுகளில் அங்கே கூட்டணி தலைவர்கள் இணைந்து பொதுக்கூட்டத்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
ஆந்திராவில் லோக்சபா தேர்தல் உடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா கட்சியுடன் இணைந்து பாஜக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்காக இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடும் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாஜக 6 லோக்சபா தொகுதிகளிலும், 10 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 17 லோக்சபா இடங்களிலும், 144 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும். ஜனசேனா இரண்டு லோக்சபா மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி ஆந்திராவில் லோக்சபா தேர்தலும் சட்டசபைத் தேர்தலும் ஒரே கட்டமாக வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை!












Click it and Unblock the Notifications