துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி: வெங்கையாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார். வெங்கையா நாயுடு 516 வாக்குகளும், கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்றனர்.

இதனையடுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்று வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதாக அறவிக்கப்பட்டது. இதையடுத்து வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் வெங்கையா நாயுடுவுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெங்கையா நாயுடுவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல ஆண்டு அரசியலில் அனுபவம் உள்ளனவர் வெங்கையா நாயுடு என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications