For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறைந்த அகமது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி

நாடாளுமன்றத்தில் நேற்று மயங்கி விழுந்த கேரள எம்பி இ.அகமது இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில நேற்று மயங்கி விழுந்த கேரள எம்பி இ.அகமது இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள எம்பி இ.அகமது திடீரென மயங்கி விழுந்தார்.

 Prime minister Modi paid tribute to MP Ahamed's body

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அனந்தகுமார் ஆகிய மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் அகமதுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அகமதுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது நாடாளுமன்ற அவைகள் வழக்கம் போல நடைபெறும என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Kerala MP E.Ahamed passed away to morning. Prime minister Modi and ministers paid tribute to his body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X