இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்.. பிரதமர் மோடி பாராட்டு!
இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

ஜிஎஸ்டிக்கு பின் முதல் பட்ஜெட்
எனவே, தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட்டை மத்தியில் ஆளும் பாஜக அரசு இன்று தாக்கல் செய்தது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

பட்ஜெட்டுக்கு பாராட்டு
ஆனால் பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி புகழாரம்
அதாவது இந்த பட்ஜெட் இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது என அவர் பாராட்டியுள்ளார். இந்த பட்ஜெட்டின் மூலம் விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சி
நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட் வழி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 மடங்கு வருமானம்
விவசாயிகளின் மூலதனம் 2 மடங்கு வருமானமாக அவர்களுக்கே வந்து சேரும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications