Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸுக்கு 100 வருஷத்துக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க! ம.பி தேர்தல் உரையில் பிரதமர் மோடி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

போபால்: நாட்டின் முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்து செல்வதில் காங்கிரஸ் நிபுணத்துவம் பெற்ற கட்சி என்றும், அக்கட்சிக்கு 100 ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க கூடாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் வரும் 17ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் தொடங்குகிறது. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சத்தர்பூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வாகனம் எப்படி நம்மை ரிவர்ஸ் கியரில் பின்னோக்கி அழைத்த செல்கிறதோ அதேபோல காங்கிரஸ் நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுத்து செல்லும்" என்று கூறியுள்ளார்.

Prime Minister Modi said that Congress should not be given power for the next 100 years

தொடர்ந்து பேசிய அவர், "மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பண்டேல்கண்ட் பகுதியில் நிலவிய தண்ணீர் பிரச்சனையை அது தீர்க்க தவறிவிட்டது. சுமார் 100 ஆண்டுகளாக இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனையே இருந்ததில்லை. அவ்வளவு செழிப்பான பகுதியை காங்கிரஸ் மீட்டும் மீட்டெடுக்கவில்லை. இதற்கு பலனாக அக்கட்சியை 100 ஆண்டுகளுக்கு ஆட்சியில் வரவிடாமல் ஏங்க வைக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்சிக்குள் நன்மைக்கான சீர்திருத்தம் ஏற்படும்.

அடிமை மனப்பான்மை கொண்ட அக்கட்சி நாட்டின் வளர்ச்சியை புரிந்துக்கொள்ளவில்லை. நாட்டின் பாரம்பரியத்துக்கும் அக்கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் செல்வந்தர்கள். அவர்கள் ஏழைகளை கேலி செய்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாஜக வீடுகளை வழங்குகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ, இந்த மக்களுடன் சாப்பிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள். இப்படி அரசியல் செய்பவர்கள் உங்களை ஒருநாள் மறந்துவிடுவார்கள்.

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதை காங்கிரஸ் கட்சி தடுக்க முயன்றது. ராமரை கற்பனை கதாபாத்திரம் என்று அவர்கள் அழைத்தார்கள். ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு கூட காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாட்டின் முதல் பழங்குடி சமூத்தை சேர்ந்த பெண் குடியரசுத் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது, இந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை பயில்வதை அது எதிர்த்தது. இப்படி அக்கட்சியின் எதிர்ப்பை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

அக்கட்சியின் தலைவர்களுக்கு சுயநலமே முக்கியம். அவர்கள் தங்கள் கஜானாவை நிரப்புவதற்காக ஆட்சியில் இருந்தபோது அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தினர். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளில் இலவவசங்கள் என்கிற பெயரில் இனிப்பு விஷத்தை செலுத்துகின்றன. ஏற்கெனவே இப்படிதான் இலவச மின்சாரம் என்று சொல்லிவிட்டு, மின் கட்டணத்தையே ஏற்றிவிட்டார்கள். காங்கிரஸின் சின்னமான கை சின்னம் ஏழைகளிடமிருந்து அனைத்தையும் பறிக்க வேண்டும் என்று துடிக்கிறது. அதிலிருந்து நாட்டை மக்கள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று பேசியுள்ளார்.

மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 17ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் மாதம் 3ம் வாக்குகள் எண்ணப்படுகிறது. அன்றைய தினமே முழு ரிசல்டும் வெளியாகிறது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த முறையும் அக்கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயன்று வரும் நிலையில், காங்கிரஸ் பெரும் போட்டியாளராக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+