Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து!!

அமெரிக்காவின் அதிபராக புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் மோடி டுவீட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். வரும் ஆண்டுகளில் அமெரிக்கா பெரிய சாதனைகளை படைக்க வாழ்த்துவதாகவும் அவர் தெ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் அதிபராக புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ட்ரம்புடன் இணைந்து செயல்பட எதிர்பார்த்திருப்பதாகவும் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Prime Minister Modi wishes US President Donald trump

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்பு பதவியேற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெனால்டு டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டனர்.

இதில் கடந்த நவம்பர் 8-ந் தேதி நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வாஷிங்டன்னில் இன்று நடைபெற்ற கோலாகல விழாவில் முறைப்படி அதிபராக பதவியேற்றார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ''அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகள் அமெரிக்க உயரிய சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.''

''அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து செயலாற்றி இந்தியா -அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்தவும் நம் ஒத்துழைப்பின் மூலம் முழு திறனை அடையவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்''. இவ்வாறு பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+