சசிகலாவுக்கு சகல உதவிகளும் செய்த பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் அனிதா.. டிரான்ஸ்பர்!!
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையின் கண்காணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட அனிதா வேறு ஒரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் சசிகலாவுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சிறை துணை டிஐஜியாக இருந்த ரூபா ஆய்வில் கண்டதை புகாராக அளித்தார்.

அவர் சிறை துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் மீதும் சசிகலாவிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து சிறை முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விசாரணையில் யாருடைய சம்பந்தப்பட்டவர்களின் குறுக்கீடு இருக்க கூடாது என்பதற்காக சிறை துறை டிஐஜியாக இருந்த ரூபாவை போக்குவரத்து துறைக்கு இடமாற்றியும், டிஜிபி சத்தியநாராயண ராவை காத்திருப்போர் பட்டியலிலும் வைத்தனர்.
மேலும் சிறையில் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ண குமாரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு அனிதா நியமிக்கப்பட்டார். அவர் சசிகலாவுக்கு ஆதரவானவர் என்ற தகவல்கள் வெளியாகின. அனிதாவின் நியமனத்துக்கு கைதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் வெளியான வீடியோ காட்சியில் சசிகலாவும் , இளவரசியும் ஷாப்பிங் சென்றுவிட்டு வருவது போன்றும் அவர்களுக்கு துணையாக சிறை கண்காணிப்பாளர் அனிதா வருவது போன்ரும் காட்சிகள் இருந்தன.
இதைத் தொடர்ந்து சிறை துறை கண்காணிப்பாளராக இருந்த அனிதா அங்கிருந்து தார்வாட் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரமேஷ் என்பவரை பரப்பன அக்ரஹார சிறையின் கண்காணிப்பாளராக நியமித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications