Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'எங்க பூவை காணோம்..' காலி பூங்கொத்தை கொடுத்த காங்கிரஸ் நிர்வாகி! குலுங்கி சிரித்த பிரியங்கா! கலகல

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரசாரத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்து மேடையில் இருந்த பிரியங்கா காந்தி வாய்விட்டுச் சிரித்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

இன்னும் சில வாரங்களில் நாட்டில் உள்ள 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுவதால் இந்த தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

 Priyanka Gandhi cant control her laugh when she received an Empty Bouquet

குறிப்பாக பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்தியப் பிரதேசத்தில் நிச்சயம் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என்று திட்டமிட்டுக் களமிறங்குகிறது.

மத்தியப் பிரதேசம்: தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இப்போது பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு கலகல சம்பவம் நடந்துள்ளது.

அங்கே நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அங்கே வந்த உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பிரியங்கா காந்திக்குப் பூங்கொத்தைக் கொடுத்தார். ஆனால், இதில் விஷயம் என்னவென்றால் அதில் ஒரு பூ கூட இல்லை. பூங்கொத்தை வாங்கிய பிரியங்கா காந்தி இதைக் கவனிக்கவும் தவறவில்லை. பூங்கொத்தில் ஒரு பூ கூட இல்லாததைப் பார்த்தவுடன் அவருக்குத் தன்னையும் மீறிச் சிரிப்பு வந்துவிட்டது.

வீடியோ டிரெண்டிங்: நேற்றைய தினம் மத்தியப் பிரதேச தேர்தலுக்காக இந்தூரில் நடந்த பிரசாரத்தின் போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த முழு நிகழ்வைக் காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் லைவில் ஒளிபரப்பினார்கள். இந்த நிகழ்வைப் பார்த்தோரும் இதைக் கவனிக்கத் தவறவில்லை. இதனால் இந்த குறிப்பிட்ட சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்திலும் டிரெண்டாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை எங்கே காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த 2018 தேர்தலிலும் கூட காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியையும் பிடித்தது. இருப்பினும், அந்த ஆட்சி 2 ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தது. ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கி, அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய, அப்போதிருந்த கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது.

பூ எங்கே: இதனால் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. கமல்நாத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இதில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் இருந்த பிரியங்கா காந்தியை உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையாக வந்து வரவேற்றனர். அப்போது சிலர் அன்பளிப்புகளையும் வழங்கினர்.

அப்போது மேடை ஏறிய ஒரு உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகி, பூங்கொத்து போல இருக்கும் ஒன்றைப் பிரியங்கா காந்தியிடம் கொடுக்கிறார். ஆனால், அதில் பூ எதுவும் இல்லை. இதனால் ஏற்கனவே மேடையில் இருந்த மற்ற தலைவர்கள் சற்று டென்ஷன் ஆனார்கள். இருப்பினும், பிரியங்கா காந்தி சிரிக்க ஆரம்பித்தால், மேடையில் கலகலப்பு ஏற்பட்டது.

அட்டாக்: இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி ஆளும் பாஜகவை சரமாரியாக விமர்சித்தார். அவர் பேசுகையில், "தீபாவளிக்கு முன் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது, இதனால் குடும்பத் தலைவிகள் கலக்கத்தில் உள்ளனர். தேர்தல் நடக்கும் போது மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு முயல்கிறது.

மற்றபடி விலைவாசி உயர்வு குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை. எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1,400 ஆக ஆக இருந்தது தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பு விலையைக் குறைத்தனர். ஆனால், மக்கள் தெளிவாக உள்ளனர். பாஜகவுக்குப் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+