ராகுல்காந்தி தொகுதியை விமர்சித்த அமைச்சர் இராணிக்கு, பிரியங்கா காந்தி பதிலடி!
ரேபரேலி: உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஐ.ஐ.ஐ.டி. அமைக்காதது தொடர்பாக ஸ்மிருதி இராணி பதில்அளிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் நேரு குடும்பம் கடந்த பல ஆண்டுகளாக வெற்று வாக்குறுதியை அளித்து வருகிறது, என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி, தனது தாயார் சோனியா காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு இரண்டு நாள் பயணமாக சென்று உள்ளார். பிரியங்கா காந்தி, ஸ்மிரிதி இராணியின் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அப்பட்டமான பொய் என்று கூறினார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, ராகுல்காந்தியின் தொகுதியான அமேதியில் ஐ.ஐ.ஐ.டி. அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ஸ்மிருதி இராணி தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். அவர் ஏன் அமேதியில் ஐ.ஐ.ஐ.டி. அமைக்கவில்லை என்பதற்கு முதலில் பதில் அளிக்க வேண்டும். இங்கு உள்ள மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர், வேண்டுமென்றே ஸ்மிரிதி இராணி இங்கு வந்துசென்று உள்ளார். இவ்வாறு பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications