நாடாளுமன்றத்திற்கு 'டூர்' வந்த சோனியா பேரன் ரைஹான்.. சபையில் இல்லாத ராகுல் மாமா!
டெல்லி: பிரியங்கா காந்தி வாத்ராவின் மகன் ரைஹான் நாடாளுமன்றத்திற்கு தனது நண்பர்களுடன் வந்து அவை பணிகளை பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து பார்த்தார்.
காங்கிரஸின் காந்தி குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறை வாரிசு பிரியங்கா காந்தி வாத்ராவின் மகன் ரைஹைான். 13 வயதாகும் ரைஹான் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
பிரியங்கா ரேபரேலி, அமேதி தொகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது தனது மகனையும், மகளையும் அவ்வப்போது அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம்
ரைஹான் வாத்ரா தனது பள்ளி நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவரை பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படங்கள் எடுக்க முயற்சி செய்தனர்.

லோக்சபா
லோக்சபாவுக்கு வந்த ரைஹான் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் உட்கார்ந்து அவை நடவடிக்கைகளை பார்த்தார்.

பாட்டி சோனியா
லோக்சபாவுக்கு ரைஹான் வந்திருந்தபோது அவையில் அவரின் பாட்டியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி இருந்தார். ஆனால் அவரின் மாமா ராகுல் காந்தி தான் அந்த நேரம் அவைக்கு வரவில்லை.

பிடிச்சிருக்கு
பள்ளி ப்ராஜெக்ட் விஷயமாக நாடாளுமன்றத்திற்கு வந்தீர்களா என்று ரைஹானிடம் கேட்க இல்லை என்றார். மேலும் அவை நடவடிக்கைகளை பார்வையிட்டது பிடித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் அலுவலகம்
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தையும் ரைஹான் சுற்றிப் பார்த்தார். நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்த்த பிறகு அவர் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications