இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா- சாத்வி பேச்சுக்கு எதிராக இமாம் கவுன்சில் போராட்டம்
டெல்லி: இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாத்வி பிராச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய இமாம் கவுன்சில் இன்று போராட்டம் நடத்தியது.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே சர்ச்சைக்குரிய கருத்துகளை அடிக்கடி தெரிவித்து வருகிறார் சாத்வி பிராச்சி. அண்மையில், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பணி முன்பே முடிந்து விட்டது. இனி இஸ்லாமியர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் நேரம் வந்து விட்டது என கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இமாம் கவுன்சில் இன்று டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தனர்.
இது குறித்து இமாம் கவுன்சில் பொது செயலாளர் மப்தி ஹனீர் அஹ்ரார் கஸ்மி கூறுகையில், சாத்வி பேச்சு அரசியலமைப்புக்கு எதிரானது; நமது நாட்டின் மதசார்பற்ற நிலையையும் அது பாதிக்கும்.
இரு வெவ்வேறு மதங்களுக்கு இடையே பகையை ஊக்குவிக்கும்; மத அடிப்படையில் சமூகத்தில் தொடர்ந்து வன்முறையை தூவி வரும் அவர் நாட்டிற்குள் பொது கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications