எங்க வீட்டுக்கு வெளியில் ஏலியனை பார்த்தேன்.. மோடிக்கு பறந்த திக் இ-மெயில்.. என்ன நடந்தது தெரியுமா?
புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் ஏலியனை பார்த்ததாக பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.
Recommended Video

புனே: புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் ஏலியனை பார்த்ததாக பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.
உலகம் முழுக்க பல ஆயிரக்கணக்கான மக்கள் தாங்கள் ஏலியனை பார்த்ததாக கூறி உள்ளனர். எங்கள் வீட்டிற்கு மேல் ஏலியனின் மிதக்கும் விமானம் சென்றது, நான் பார்த்தேன் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள்.
இதற்காக பலர் வீடியோக்கள் கூட வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவரும் இதேபோல் ஏலியனை பார்த்ததாக கூறியுள்ளார்.

மோடிக்கு கடிதம்
கடந்த வாரம் பிரதமர் மோடியின் அலுவலக மெயில் ஐடிக்கு முக்கியமான மெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலை அனுப்பிய நபர் ''எங்கள் வீட்டிற்கு வெளியே ஏலியன்களின் விமானத்தை பார்த்தேன். ஏலியன்கள் நம்மிடம் பேச விருப்பப்படுகிறது. இதை உடனடியாக விசாரியுங்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இது பிரதமர் அலுவலக மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

அனுப்பினார்
இந்த மெயிலை பிரதமர் அலுவலகம் உடனடியாக மகாராஷ்டிரா காவல் நிலையத்திற்கு அனுப்பியது. அதையடுத்து மகாராஷ்டிரா காவல்துறை இந்த மெயில் அனுப்பிய நபரை தேடியது. மெயில் ஐடியை வைத்து, சைபர் கிரைம் மூலம் யார் என்று விவரங்களை தேடியது.

யார் தெரியுமா
விசாரணைக்கு பின் இந்த மெயிலை அனுப்பியது யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. புனேவை சேர்ந்த 40 வயது நிரம்பிய அந்த நபர், புனேவின் கோத்ரூட் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவரது அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. இவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணை
இவரை போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். இவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவெடுத்து இருக்கிறார்கள் .
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications