புனேவில் வாலிபர் சுட்டு, குத்திக் கொலை: சிசிடிவி கேமராவில் பதிவு
புனே: புனேவில் வாலிவர் ஒருவர் தனது உறவினர்களால் முதலில் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் சச்சின் ஷிண்டே. அவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை சச்சின் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவியின் உறவினர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கத்தியால் குத்திக் கொன்றனர். அப்போது மேலும் 5 பேர் வந்து சாலையில் கிடந்த சச்சின் உடல் மீது கற்களை வீசித் தாக்கினர்.
அந்த இடத்தில் கூட்டம் கூடும் வரை அவர்கள் சச்சின் உடலை கல்லால் அடித்தனர். கூட்டம் கூடியதும் அவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீாசர் ஒருவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகிறார்கள். இது கௌரவக் கொலை அல்ல என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications