3000 முஸ்லீ்ம்களைக் கொல்லுங்கள்.. வெறித்தனமான டிவிட் போட்ட மாணவர் கைது!
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 20 வயது மாணவர், முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமான டிவிட் போட்டு தற்போது கைதாகியுள்ளார்.
மிகவும் மோசமான முறையில் அவர் போட்டிருந்த டிவிட்டுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த மாணவர் மீது போலீஸார் மத துவேஷ தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

அந்த நபரின் பெயர் அமிதேஷ் சிங். 20 வயதாகும் இவர் முதலாமாண்டு சிவில் என்ஜீனியரிங் மாணவர் ஆவார். டிவிட்டரில் மே 2ம் தேதி அவர் ஒரு துவேஷமான, வெறித்தனமான டிவிட்டைப் போட்டிருந்தார். அதில், 3000 முஸ்லீம்களை நாளையே கொல்லுங்கள் என்று போட்டிருந்தார்.
இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேரு பிரபலங்களும் இந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் பாஜகவைச் சேர்ந்தவன் என்றும், பாரதிய ஜனதா இளைஞர் பிரிவின் புனே நகர துணைத் தலைவர் என்றும் போட்டிருந்தார் அமிதேஷ் சிங். மேலும் மோடியை டிவிட்டர் பக்கத்தில் அவர் பாலோ செய்தும் வந்தார். இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தனது டிவிட் போஸ்ட்டை அழித்து விட்டார் அமிதேஷ் சிங். ஆனால் அவர் போட்டிருந்த டிவிட் காட்டுத் தீ போல பரவி விட்டது.
இதையடுத்து புனே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாணையில் குதித்தனர். அப்போதுதான் அவர் ஒரு மாணவர் என்று தெரிய வந்தது. அதேசமயம், அவர் பாஜகவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் தெரிய வந்ததாம்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சதீஷ் நிகாம் கூறுகையில், தனது செயலுக்காக அந்த மாணவர் வருத்தம் தெரிவித்தார். தற்போது அந்த போஸ்ட் நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவரது போஸ்ட்டை பலர் ஷேர் செய்துள்ளனர். தற்போது சிங்கைக் கைது செய்துள்ளோம். அவர் மீது மதத்தின் பெயரால் இரு பிரிவினருக்கு இடையே துவேஷத்தைத் தண்டி விடுதல், குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை வேண்டும் என்றே தூண்டுவது, சைபர் தீவிரவாத குற்றச்சாட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications