புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள்

Subscribe to Oneindia Tamil

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் புதுமணத் தம்பதியை கண்ட முதல்வர் சரண்ஜித் சன்னி அவர்களை வாழ்த்த தனது கான்வாயை நிறுத்தி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கும் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு இருந்து வந்தது.

இந்த நிலையில் இருவரையும் கட்சித் தலைமை அழைத்து பேசியும் இவர்கள் சமாதானம் ஆகவில்லை. பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இது போல் சித்துவும் அவர் தரப்பு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதிருப்தியில் அமரீந்தர்

அதிருப்தியில் அமரீந்தர்

இதனால் மேலும் அதிருப்தி அடைந்த அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இது குறித்து கூறிய அமரீந்தர் சிங், எனக்கு தெரியாமல் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்திருப்பது இது மூன்றாவது முறை. இதனால் நான் பதவி விலக முடிவு செய்தேன். சமீபத்திய நிகழ்வுகள் என்னை அவமதிப்பது போல் உள்ளது என்றார்.

புதிய முதல்வர்

புதிய முதல்வர்

இதையடுத்து விவசாயியான சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அவர் மக்களோடு மக்களாக பழகி வருகிறார். இந்த நிலையில் சன்னி தனது காரில் பதிந்தாவுக்கு நேற்றைய தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கான்வாயை திடீரென நிறுத்தினார்.

திருமண வீட்டார்

திருமண வீட்டார்

பின்னர் அவ்வழியாக வந்த புதுமணத் தம்பதிகளிடம் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். புதுமாப்பிள்ளையை ஆரத்தழுவி வாழ்த்திய சன்னி, புதுமணப் பெண்ணுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். எப்போது திருமணம் நடந்தது என கேட்டதற்கு சனிக்கிழமை என திருமண வீட்டார் முதல்வர் சன்னியிடம் தெரிவித்தனர்.

மாணவர்கள் நிகழ்ச்சி

பாதுகாப்பு வீரர்கள் புடைச்சூழ திருமண வீட்டார் சீராக கொண்டு வந்த இனிப்பையும் அவர் உண்டு மகிழ்ந்தார். அண்மையில் காபூர்தலாவில் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சன்னி பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பாங்கரா ஆடி மகிழ்வித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+